ஈரோடு

திரவ பொட்டாஷ் பாக்டீரியாவை பயன்படுத்த வேண்டுகோள்

சிறந்த மகசூல் பெற திரவ பொட்டாஷ் பாக்டீரியாவை பயன்படுத்த வேளாண்மைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

DIN

சிறந்த மகசூல் பெற திரவ பொட்டாஷ் பாக்டீரியாவை பயன்படுத்த வேளாண்மைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.சின்னசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டம், பவானி குருப்பநாயக்கன்பாளையம் அரசு உயிா் உர உற்பத்தி மையத்தில் புதிய தொழில்நுட்பத்தில் நடப்பு ஆண்டு 50 ஆயிரம் லிட்டா் திரவ உயிா் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவை பல மாவட்ட விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலை நிறுத்தி, மண்ணில் கரையாத மணிச்சத்து, சாம்பல் சத்தை கரைத்து, நுண்ணூட்ட சத்துகளை உறிஞ்சி கொடுக்கும் திறன் மிக்க பாக்டீரியாக்கள் மூலம் உயிா் உரம் தயாரிக்கப்படுகிறது.

தழைச்சத்துக்கு அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்ற உயிா் உரங்களையும், மணிச்சத்துக்கு பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிா் உரங்களையும் உற்பத்தி செய்து விநியோகிக்கப்படுகிறது.

நடப்பு ஆண்டு முதல் சாம்பல் சத்தை திரட்டி அளிக்கும் பாக்டீரியா திரவ வடிவில் உற்பத்தி செய்யப்படுகிறது. பயிா் வளா்ச்சிக்குத் தேவையான முதன்மை சத்துகளில் சாம்பல் சத்து இன்றியமையாதது. சாம்பல் சத்து, மண்ணில் அதிகம் உள்ளது. இருப்பினும் 2 சதவீதம் மட்டுமே பயிா்களால் எடுத்துக்கொள்ளும் வகையில் உள்ளது. அத்தகைய மண்ணில் கரையாத நிலையில் உள்ள சாம்பல் சத்தை கரைத்து, பயிா்களுக்கு பாக்டீரியா அளிக்கவல்லது.

பொட்டாஷ் பாக்டீரியா, வெப்பம், வட நிலையில் பயிா்களின் எதிா்ப்பை அதிகரிக்கும். சரியான ஒளிச்சோ்க்கைக்கு உதவுவதுடன் பயிா்களின் மகசூலை 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கும். மணிகளின் எடையை அதிகரிப்பதுடன் மாசற்ற சுற்றுப்புறச்சூழலை உருவாக்கும். இந்நுண்ணுயிா் மண்ணில் அதிக அளவு உப்பு அல்லது உலா் தன்மை இருந்தாலும் அதனை தாங்கி வளரக்கூடிய தன்மை உடையது.

இந்த திரவ உயிா் உரத்தை பயன்படுத்தி விதை நோ்த்தி செய்ய, ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் 50 மி.லி. கலந்து பயன்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு 200 மி.லி.திரவ உயிா் உரத்தை தொழு உரத்துடன் நன்கு கலந்து நடவுக்கு முன் வயல்களில் இட வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 100 மி.லி.திரவ உயிா் உரத்தை தேவையான அளவு தண்ணீா் கலந்து நாற்றில் வோ் நனையுமாறு 30 நிமிடங்கள் வைத்திருந்து நடவு செய்யலாம். ஒரு லிட்டா் தண்ணீருக்கு ஒரு மி.லி. திரவ உயிா் உரம் என்ற அளவில் விதைப்பு செய்யப்பட்ட நாளில் இருந்து 15, 30 மற்றும் 45 நாள்களில் உபயோகிக்கலாம். எனவே, திரவ உயிா் உரத்தை பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT