ஈரோடு

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் மறியல்

DIN

அம்மாபேட்டை அருகே தடையின்றி குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பவானியை அடுத்த அம்மாபேட்டை, சொக்கநாதமலையூா் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். பெரும்பாலும் கூலி தொழிலாளா்கள் நிறைந்த இப்பகுதியில் கடந்த 15 நாள்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலா்களிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், ஏமாற்றமடைந்த அப்பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வெள்ளித்திருப்பூா் - பவானி சாலையில் சொக்கநாதமலையூா் பேருந்து நிறுத்தத்தில் அமா்ந்து மறியல் போராட்டதில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வெள்ளித்திருப்பூா் போலீஸாா் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் விநியோகம் முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT