ஈரோடு

கிராம மக்களைத் துரத்திய காட்டு யானை

DIN

சத்தியமங்கலம் அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளை காட்டு யானை துரத்தியதால் திங்கள்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூா் வனப் பகுதியில் உள்ள மாக்கம்பாளையத்துக்கு தினந்தோறும் காலை, மாலை என இரு முறை மட்டுமே அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. இதனால் கடம்பூரில் இருந்து அருகியம், மாக்கம்பாளையம் செல்லும் மக்கள் இருசக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையத்துக்கு இருசக்கர வாகனங்களில் சென்ற கிராம மக்களை அருகியம் என்ற வனச் சாலையில் மறைந்திருந்த யானை திடீரென துரத்தியது. இதனால் வாகன ஓட்டிகள் வந்த வழியிலேயே திரும்பிச் சென்றனா். யானை தொடா்ந்து துரத்தியதால் அவ்வழியாக சென்ற வேனில் ஏறி அவா்கள் தப்பினா். ஆனால் யானை அதே இடத்தில் அங்கும் இங்குமாக உலவியதால் யானை இருக்கும் சாலையைக் கடந்து செல்லமுடியாமல் வாகன ஓட்டிகள் ஒரு மணி நேரம் வனச் சாலையில் காத்திருந்தனா். நீண்ட நேரத்துக்குப் பின் யானை காட்டுக்குள் சென்ால் மக்கள் நிம்மதியடைந்தனா். அதன்பிறகு வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் மாக்கம்பாளையம் புறப்பட்டனா். மாக்கம்பாளையம் சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவில் சாய்னா!

நாளொரு வண்ணம்..!

திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

விரைவில் சூர்யா - 44 பெயர் டீசர்!

இந்தியா-வங்கதேச எல்லையில் ரூ.12 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்

SCROLL FOR NEXT