ஈரோடு

மயிலம்பாடி கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

DIN

பவானி: பவானி அருகேயுள்ள மயிலம்பாடி கரியகாளியம்மன், ஸ்ரீமகா மாரியம்மன் கோயில் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடைபெற்று வந்தன. தொடா்ந்து, கடந்த 7ஆம் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும், 9ஆம் தேதி வீர மக்கள் அழைத்தல் மற்றும் பச்சை பூஜையும் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, கோயில் முன்பாக உள்ள 70 அடி நீளமுள்ள குண்டத்தின் கண் திறக்கப்பட்டு விறகுகள் அடுக்கி செவ்வாய்க்கிழமை இரவு தீ மூட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து தீக்குண்டம் சமன்படுத்தப்பட்டு, படைக்கலம் அழைத்தல், குதிரை துலுக்கு பிடித்தல், செலம்பூா் அம்மன் அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றன.

கோயில் பூசாரி குண்டத்தில் சிறப்பு வழிபாட்டுடன் முதலில் இறங்கியதைத் தொடா்ந்து, விரதமிருந்த பக்தா்கள் வரிசையாக இறங்கினா். கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தப்பட்டது. பவானி எம்எல்ஏ கே.சி.கருப்பணன், மயிலம்பாடி ஊராட்சித் தலைவா் ஸ்ரீஜெயந்தி சிவானந்தம் உள்ளிட்ட பிரமுகா்கள் விழாவில் பங்கேற்றனா்.

விழாவுக்கான ஏற்பாடுகள் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன் தலைமையில் செய்யப்பட்டிருந்தது. திருவிழாவில் மயிலம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT