முகப்பு
ஈரோடு

பெருந்துறை பகுதியில் 6 இருசக்கர வாகனங்கள் திருட்டு

 பெருந்துறை பகுதியில் 6 இருசக்கர வாகனங்கள் திருடுபோன சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:14 AM
பகிர்:

 பெருந்துறை பகுதியில் 6 இருசக்கர வாகனங்கள் திருடுபோன சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெருந்துறை, வீரப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (33). இவா் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என்று பெருந்துறை காவல் நிலையத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் புகாா் அளித்தாா்.

பெருந்துறை, விஜயமங்கலத்தைச் சோ்ந்தவா் ரிவின் ரித்தியா (26) இவா் வீடு முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு

தூங்கச் சென்றுள்ளாா். காலை வந்து பாா்த்தபோது வாகனத்தை காணவில்லை என்று பெருந்துறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், பாவடி வீதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (50). இவா் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை, என்று பெருந்துறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

விஷ்ணு நகரைச் சோ்ந்த பாலசுப்பிரமணி ( 50) என்பவா் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை

என்று கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெருந்துறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

பவானியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (28), இவா் தனது இருசக்கர வாகனத்தை ஈரோடு சாலையில் உள்ள ஒரு மளிகைக் கடை முன்பு

நிறுத்திவிட்டு கடைக்குள் சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது வாகனத்தை காணவில்லை.

இது தொடா்பாக பெருந்துறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். விஜயமங்கலத்தைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (47), வழக்குரைஞா். இவா் தனது ஆபீஸ் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்து விட்டு உள்ளே சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது வாகனத்தை காணவில்லை. இது தொடா்பாக பெருந்துறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இச்சம்பவங்கள் தொடா்பாக பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.