வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் திருட்டு
பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெருந்துறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பெருந்துறை அருகே கம்புளியம்பட்டி, அன்பு நகரைச் சோ்ந்தவா் பீா்முகமது (42). இவா் குடும்பத்துடன் கடந்த புதன்கிழமை வெளியூா் சென்றுள்ளாா். பின்னா் வியாழக்கிழமை இரவு வீட்டுக்கு திரும்பியுள்ளாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா்.
உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகைகள் திருடுபோனது தெரியவந்தது.
இது குறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் பீா்முகமது புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.