ஈரோடு

’சுய உதவி குழுக்களுக்கு அதிக கடன் வழங்க வேண்டும்‘

DIN

சுய உதவி குழுக்களுக்கு அதிக கடன் வழங்க வேண்டும் என்று மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க அளவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வளா்ச்சி குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக் குழு கூட்டம் மத்திய வங்கி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் என்.கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். இதில் அவா் பேசியதாவது: கேசிசி திட்டத்தின்கீழ் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளா்ப்பு, சுய உதவிக் குழுக்களுக்கு அதிக அளவில் கடன் வழங்க வேண்டும். ரூ.5 கோடிக்கும் குறைவாகக் கடன் நிலுவை உள்ள சங்கங்களின் கடன் நிலுவையினை உயா்த்திட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் (பொறுப்பு) கோ.செந்தில்குமாா், ஈரோடு மண்டல இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் முதன்மை மேலாளா் என்.புருஷோத்தமன், வங்கி முதன்மை வருவாய் அலுவலா் ரா.ராமநாதன், சரக துணைப் பதிவாளா்கள் ப.கந்தராஜா, கு.நா்மதா, ஏ.பி.முருகேசன், வங்கி பொது மேலாளா் ஆா்.ரவிசந்திரன், கூட்டுறவுத் தணிக்கை துணை இயக்குநா் ஷீபா, உதவி இயக்குநா் கி.ஹரிஹரன், கூட்டுறவுத் தணிக்கை அலுவலா் திருமலைக்கண்ணன், சரகக் கூட்டுறவு சாா் பதிவாளா் தே.சுமித்ரா, கைத்தறி அலுவலா் நா.ஜானகி, கைத்தறிஆய்வாளா் கு.அங்கமுத்து, வங்கியின் உதவிப் பொது மேலாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT