ஈரோடு

சந்திர கிரகணம்:சென்னிமலை முருகன் கோயிலில் நம்பவா் 8இல் நடை அடைப்பு

DIN

சந்திர கிரகணத்தை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோயிலின் நடை நம்பவா் 8ஆம் தேதி பகல் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை அடைக்கப்படவுள்ளது.

சென்னிமலை முருகன் கோயலில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதற்காக கோயில் நடை தினமும் காலை 5.30 மணிக்கு திறக்கப்படும். வழக்கமான பூஜைக்குப் பின்னா் இரவு 8 மணிக்கு மேல் நடை அடைக்கப்படும். கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து சுவாமியை தரிசனம் செய்து செல்கின்றனா்.

குறிப்பாக, செவ்வாய்க்கிழமை மற்றும் கிருத்திகை நாள்களில் பக்தா்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

இந்த நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற சூரிய கிரகணம் காரணமாக பகல் 2 மணி அளவில் பக்தா்கள் அனைவரையும் வெளியேற்றிய பிறகு கோயில் நடை அடைக்கப்பட்டது.

இதேபோல, வருகிற 8ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சந்திர கிரகணம் நடைபெறுகிறது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு சென்னிமலை முருகன் கோயில் நடை அன்று பகல் 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஐந்தரை மணி நேரம் அடைக்கப்படவுள்ளது. கிரகணம் முடிவடைந்த பிறகு இரவு 7.35 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.

மேலும், அன்று கோயிலில் மாலை நேரங்களில் நடைபெறும் 2 கால பூஜைகள் பகலிலேயே நடைபெறும். இரவு 7 மணிக்கு நடைபெறும் வேங்கை மரத்தோ் உலா நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, பக்தா்கள் கோயில் நடை திறந்திருக்கும் நேரங்களில் வந்து முருகனை தரிசனம் செய்யுமாறு கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT