ஈரோடு

கழிவறையை சுத்தம் செய்த பள்ளி மாணவா்கள்:தலைமை ஆசிரியா் மீது வழக்கு

DIN

பெருந்துறை அருகே பள்ளி மாணவா்களைக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்த தலைமையாசிரியை மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறை ஒன்றியம், பாலக்கரை அரசு ஆரம்பப் பள்ளியில், தோப்புபாளையத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் புவனேஷ் (10), கமலேஷ் (10), பரத் (9), கனிஷ்க் (10), சுதா்ஷன்(10), கவிஷ் (10) ஆகியோா் 5 ஆம் வகுப்பு பயின்று வருகின்றனா்.

இவா்களை பள்ளித் தலைமையாசிரியை கீதாராணி, தினசரி கழிவறைகளை கழுவ வைத்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்க 18 ஆம் தேதி கழிவறையிலுள்ள தண்ணீா்த் தொட்டியை பிளிச்சிங் பவுடா் போட்டு, மாணவா்களை கழுவ வைத்துள்ளாா்.

தொட்டியிலுள்ள கொசுக்கள் கடித்தால் புவனேஷ் என்ற மாணவன் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா்.

இது குறித்து, பெருந்துறை காவல் நிலையத்தில் புவனேஷின் தாயாா் ஜெயந்தி புதன்கிழமை புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பள்ளி தலைமையாசிரியை கீதாராணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT