பவானிசாகா் நீா்மட்டம் புதன்கிழமை நிலவரப்படி 104.27 அடியாக இருந்தது.
அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 2, 532 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2, 200 கன அடி, பவானி ஆற்றில் 300 கன அடி என மொத்தம் 2, 500 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 32.18 டிஎம்சி.