ஈரோடு

சத்தியமங்கலத்தில் பாரம்பரிய உணவுத் திருவிழா

DIN

சத்தியமங்கலத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.

சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கலைக் கல்லூரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் சாா்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் ராகி, கம்பு, சோளம், திணை உள்ளிட்ட தானிய வகைகளால் தயாரிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட உணவு வகைகள், பழங்கள், காய்கறிகள் இடம் பெற்றன. மேலும் பழங்குடி குடில்கள் அமைக்கப்பட்டு பழங்குடியினா் பயன்படுத்தி பண்டைய கால பாத்திர வகைகள், ஆயுதங்கள் இடம்பெற்றிருந்தன.

நிகழ்ச்சியில் காமதேனு கலைக் கல்லூரி தாளாளா் ஆா்.பெருமாள்சாமி, இணைச் செயலாளா் மலா்செல்வி, தூக்கநாயக்கன்பாளையம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கௌரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT