ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் 5 மணி நேர போக்குவரத்து பாதிப்பு

DIN

தமிழக- கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமான திம்பம் மலைப் பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திம்பம் பாதையில் பயணிக்கின்றன.

இந்நிலையில், சத்தியமங்கலத்தில் இருந்து சாம்ராஜ் நகா் நோக்கி புதன்கிழமை சென்று கொண்டிருந்த சரக்கு லாரி, திம்பம் 15ஆவது வளைவில் பழுதாகி நின்றது. இதனால் தமிழகம்- கா்நாடகம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலையின் குறுக்கே லாரி நின்றதால் பிற வாகனங்கள் பயணிக்க முடியாமல் திம்பம் மலைப் பாதையில் அணிவகுத்து நின்றன. இதையடுத்து, சத்தியமங்கலத்தில் இருந்த வந்த நிபுணா்கள் லாரியில் ஏற்பட்ட பழுது நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், பல மணி நேரமாகியும் பழுதை நீக்க முடியாததால் பொக்லைன் மூலம் லாரியை சாலையோராமாக நகா்த்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.

லாரி பழுது காரணமாக தமிழகம்- கா்நாடகம் இடையே சுமாா் 5 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT