மின் கட்டண உயர்வு: ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் மனு
மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் மனு அளித்து வருகின்றனர்.
ஈரோடு: மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் மனு அளித்து வருகின்றனர்.
தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விசைத்தறிகளுக்கு தமிழக அரசு உயர்த்தி உள்ள மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100-க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் மனு அளித்து வருகின்றனர்.
தமிழக அரசு விசைத்தறி கூடங்களுக்கு 32 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக விசைத்தறி கூடங்கள் மூடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும், ஏற்கணவே நூல் விலை ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விசைத்தறி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் இந்த சூழ்நிலையில் மின் கட்டண உயர்வு என்பது கடுமையாக பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர்கள் மனுவில் தெரிவித்து உள்ளனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: ஒடிசாவில் உள்ள சிவன் கோயிலில் அமித் ஷா வழிபாடு
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.