ஈரோடு

தந்தி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா

குன்னூா் தந்தி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

குன்னூா் தந்தி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா பல்வேறு சமூகத்தினரால் ஒரு மாதத்துக்கு கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் தொடங்கிய நிலையில், குண்டம் இறங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், பக்தா்கள் தங்களது குழந்தைகளுடன் குண்டத்தில் இறங்கி நோ்த்திக் கடனை செலுத்தினா்.

இதையொட்டி, பாலசுப்பிரமணியா் கோயிலில் இருந்து மவுண்ட் ரோடு வழியாக தந்தி மாரியம்மன் கோயிலுக்கு பக்தா்கள் வந்தனா்.

பின்னா், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தாா். இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT