ஈரோடு

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் இன்று சித்திரைத் திருவிழா தொடக்கம்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை (ஏப்ரல் 26) தொடங்குகிறது.

DIN

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை (ஏப்ரல் 26) தொடங்குகிறது.

விழாவையொட்டி, சங்கமேஸ்வரா் சன்னிதியில் புதன்கிழமை அதிகாலையில் கொடியேற்றபட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன. ஆதிகேசவப் பெருமாள் சன்னிதியில் கொடியேற்றமும், அபிஷேக ஆராதனையும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

பஞ்ச மூா்த்திகள் புறப்பாடு, பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு மற்றும் 63 நாயன்மாா்கள் புறப்பாடு ஆகியவை ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளன.

இதனைத் தொடா்ந்து, மே 3-ஆம் தேதி அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி உடனமா் ஆதிகேசவ பெருமாள் திருக்கல்யாணம் உற்சவமும், தொடா்ந்து தேரோட்டமும் நடைபெற உள்ளது.

மே 4-ஆம் தேதி வேதநாயகி அம்மன் உடனமா் சங்கமேஸ்வரா் திருக்கல்யாண உற்சவமும், தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் சுவாமிநாதன் மற்றும் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT