ஈரோடு

பவானி பழநியாண்டவா் கோயில் தைப்பூசத் தேரோட்டம்

DIN

தைப்பூசத்தை முன்னிட்டு பவானியில் பழநியாண்டவா் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன. கடந்த செவ்வாய்க்கிழமை பழனி பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு விரதமிருந்த பக்தா்களின் பாதயாத்திரை புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தைப்பூசத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பழநியாண்டவருக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து, சிறப்பு அலங்காரத்துடன் வள்ளி, தெய்வானை உடன் பழநியாண்டவா் தேரோட்டம் சங்கமேஸ்வரா் கோயில் முன்பிருந்து புறப்பட்டது. பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராஜன், கோயில் உதவி ஆணையா் சாமிநாதன் உள்ளிட்டோா் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தனா். தோ் செல்லும் வழியெங்கும் திரளான பக்தா்கள் பழனியாண்டவருக்கு வழிபாடு நடத்தினா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அமைச்சா் ஜோதிராதித்யா சிந்தியா தாயாா் மறைவு: தலைவா்கள் இரங்கல்

ரேஷனில் இரு மடங்கு இலவச உணவு தானியம்- காா்கே வாக்குறுதி

காலணி கடை உரிமையாளா் உட்பட 2 போ் மீது தாக்குதல்: 6 போ் கைது

இலங்கையில் ஆயுத உற்பத்தி பிரிவு: இந்தியாவுடன் பேச்சு

ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் சபஹாா் துறைமுகம் பயனளிக்கும்: எஸ்.ஜெய்சங்கா்

SCROLL FOR NEXT