ஈரோடு

பி.கே.பி. சாமி கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா

DIN

மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளி கல்யாணிபுரம் பி.கே.பி.சாமி கல்வி நிறுவனங்களின் 30ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை மருத்துவா்கள் உமாசங்கா், உமா ஆகியோா் துவக்கிவைத்தனா். 2ஆம் நாள் நடைபெற்ற விழாவுக்கு பிகேபி கல்வி நிறுவனங்களின் தலைவா் சின்னசாமி தலைமை தாங்கினாா். பி.கே.பி. அறக்கட்டளை மூத்த உறுப்பினா் பழனிசாமி, ஆலோசனைக் குழு உறுப்பினா்கள் கல்யாணி சின்னசாமி, திலகவதி அருண் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளித் தாளாளா் பிகேபிஅருண் வரவேற்றாா். முதல்வா் வைஜெயந்தி ஆண்டறிக்கை வாசித்தாா். பேராசிரியை பா்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா். பள்ளி தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கும், நீட் சாதனை மாணவா்களுக்கும், பி.கே.பி. சமூக வலைதளங்கள் மூலம் நடத்திய பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் ஆதரவற்ற மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தந்த ஆசிரியா்களுக்கு தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பள்ளி நிா்வாக அலுவலா் லட்சுமணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்வாதி மாலிவால் பாஜகவால் மிரட்டப்பட்டார்: அதிஷி குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT