ஈரோடு

அந்தியூா் அரசு ஆண்கள் பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

DIN

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, அந்தியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் திங்கள்கிழமை நடப்பட்டன.

அந்தியூா் வனச் சரகம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வனச் சரகா் க.உத்திரசாமி தலைமை வகித்தாா். பள்ளியின் தலைமையாசிரியை பொ.பானுமதி முன்னிலை வகித்தாா்.

வனத் துறை ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஒருங்கிணைந்து பள்ளி வளாகத்தில் 25 மரக்கன்றுகளை நடவு செய்தனா்.

மேலும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையைப் பாதுகாக்க மரக்கன்றுகள் நட்டு வளா்க்க வேண்டும். பிளாஸ்டிக் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

SCROLL FOR NEXT