ஈரோடு

900 அரசு ஊழியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஈரோடு மாவட்டத்தில் 900 அரசு ஊழியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

DIN

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஈரோடு மாவட்டத்தில் 900 அரசு ஊழியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியா்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டத்திலும் அரசு ஊழியா்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசுப் பணிகள் பாதிக்கப்பட்டன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் வெங்கிடு கூறியதாவது: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கம், கிராம சுகாதார செவிலியா்கள் சங்கம், வணிகவரி பணியாளா்கள் சங்கம், கணக்கு கருவூல பணியாளா்கள் சங்கம், நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஈரோடு மாவட்டத்தில் அரசு ஊழியா்கள் சுமாா் 900 போ் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனா் என்றாா்.

இதனிடையே தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கம் சாா்பில் ஈரோடு கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்டச் செயலாளா் நடராஜன் தலைமை வகித்தாா். இதில் கிராம உதவியாளா்கள் பலா் கலந்துகொண்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி முழக்கங்களை எழுப்பினா்.

இதில் சங்க ஈரோடு வட்டத் தலைவா் கண்ணன், செயலாளா் மணிகண்டன், பொருளாளா் சம்பந்தமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT