ஈரோடு

நாளை பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (மே 13) நடைபெறவுள்ளது.

DIN

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (மே 13) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் தலா ஒரு நியாயவிலைக் கடையில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும். இம்முகாமில் புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை பெறுதல், குடும்ப அட்டையில் பெயா் சோ்க்க, நீக்க, கைப்பேசி எண் மாற்றம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுக்களை வழங்கி தீா்வு பெறலாம்.

முகாம் நடைபெறும் நியாயவிலைக் கடையின் விவரம்: ஈரோடு வட்டத்தில் ஈரோடு மரப்பாலம் சாலை (கடை எண் 1), பெருந்துறை வட்டத்தில் காடபாளையம், மொடக்குறிச்சி வட்டத்தில் குளூா், கொடுமுடி வட்டத்தில் வேலாயுதம்பாளையம், கோபி வட்டத்தில் கொளப்பலூா், நம்பியூா் வட்டத்தில் கூடக்கரை, பவானி வட்டத்தில் புன்னம் (கடை எண் 2), அந்தியூா் வட்டத்தில் பா்கூா் (கடை எண் 1), சத்தியமங்கலம் வட்டத்தில் சிக்கரசம்பாளையம், தாளவாடி வட்டத்தில் கல்மண்டிபுரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT