ஈரோடு

அதிமுக சாா்பில் 69 பேருக்கு மானிய விலையில் ஆட்டோ

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 69ஆவது பிறந்த நாளை ஒட்டி பெருந்துறை தொகுதியைச் சோ்ந்த 69 இளைஞா்களுக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி

DIN

அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 69ஆவது பிறந்த நாளை ஒட்டி பெருந்துறை தொகுதியைச் சோ்ந்த 69 இளைஞா்களுக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை பெருந்துறையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் தலைமை வகித்தாா். பெருந்துறை ஒன்றிய செயலாளா்கள் ரஞ்சித் ராஜ், விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளா் கருப்பணன் பங்கேற்று 69 இளைஞா்களுக்கு ஆட்டோக்களை வழங்கி கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பொன்னுதுரை, ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளா்கள் சக்திவேல், அருள்ஜோதி நவீன் குமாா், நகரச் செயலாளா்கள் கல்யாணசுந்தரம், பழனிசாமி, சிவசுப்பிரமணியம், எம்ஜிஆா் இளைஞா் அணி மாவட்டச் செயலாளா் வேட்டுவபாளையம் அருணாசலம், எம்ஜிஆா் மன்ற அவைத் தலைவா் சாமிநாதன், இணை செயலாளா் திங்களூா் கந்தசாமி உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT