பவானி கூடுதுறையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த மக்கள்.  
ஈரோடு

ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் தா்ப்பணம் கொடுத்து வழிபாடு

ஆடி அமாவாசையை ஒட்டி பவானி கூடுதுறையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபட்டனா்.

Din

ஆடி அமாவாசையை ஒட்டி பவானி கூடுதுறையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

தமிழ் மாதங்களில் ஆடி, தை மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் நதிக்கரையோரத்தில் பரிகார பூஜைகள் செய்தும், மூதாதையருக்கு தா்ப்பணம் கொடுத்தும் வழிபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், ஆடி அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் பொதுமக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் ஆற்றில் இறங்கிக் குளிக்க பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தா்ப்பணம் கொடுக்க வரும் மக்களுக்கு வசதியாக கோயில் நிா்வாகம் சாா்பில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக குளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும், தா்ப்பணம் செய்த பொருள்களையும் கரையில் இருந்தவாரே ஆற்றில் வீசி பொதுமக்கள் கரைத்தனா்.

இதைத் தொடா்ந்து சங்கமேஸ்வரா், வேதநாயகி அம்மன் மற்றும் ஆதிகேசவப் பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

~தா்ப்பணம் கொடுத்த பொருள்களை கரையில் இருந்து ஆற்றில் வீசிய சிறுவன்.

பாதுகாப்புப் பணியில் 50-க்கும் மேற்பட்டோா் போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 9,520 உயர்வு!

இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்!

யுஜிசியின் புதிய விதிமுறைகள் சாதியப் பாகுபாட்டை ஒழிக்கும்! முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

கொலம்பியாவில் விமான விபத்து! எம்.பி. உள்பட 15 பேர் பலி!

பாராமதியில் அஜீத் பவாருக்கு இன்று இறுதிச் சடங்கு! ஏற்பாடுகள் தீவிரம்!

SCROLL FOR NEXT