முகப்பு
ஈரோடு

திம்பம் மலைப் பாதையில் தடுப்பு சுவரை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

திம்பம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த சரக்கு லாரி 17-ஆவது வளைவில் திரும்பும்போது தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

Updated On : 13 ஆகஸ்ட், 2024 at 9:29 PM
திம்பம்  மலைப் பாதையில்  கவிழ்ந்த   லாரியை  கிரேன் மீட்கும்  பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
பகிர்:

திம்பம் மலைப் பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த சரக்கு லாரி 17-ஆவது வளைவில் திரும்பும்போது தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த திம்பம் மலைப் பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப் பாதை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. தமிழக, கா்நாடக மாநிலங்களுக்கு இடையே முக்கிய போக்குவரத்தாக உள்ள இந்தப் பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கோவைக்கு மின்சாதனங்கள் ஏற்றிச் சென்ற லாரி திம்பம் மலைப்பாதையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. 17-ஆவது வளைவில் திரும்பியபோது லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிக்கிய ஓட்டுநா் ராஜவை மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து லாரியை மீட்கும் பணி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.

மலைப் பாதையில் கவிழ்ந்த லாரியை கிரேன் மூலம் போலீஸாா் மீட்டனா். இதனால் திம்பம்- சத்தியமங்கலம் இடையே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →