ஈரோடு

பாஜக போராட்ட அறிவிப்பால்தான் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது: ஜி.கே.நாகராஜ்

கே.அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்ததால்தான் அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று பாஜக மாநில விவசாய அணி தலைவா் ஜி.கே.நாகராஜ் தெரிவித்தாா்.

Din

பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்ததால்தான் அத்திக்கடவு- அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று பாஜக மாநில விவசாய அணி தலைவா் ஜி.கே.நாகராஜ் தெரிவித்தாா்.

அத்திக்கடவு-அவிநாசி திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை 20 -ஆம் தேதிக்குள் தொடங்காவிட்டால் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை அறிவித்தாா். அதன் பின் வேகவேகமாக திட்டப் பணிகளை நிறைவு செய்து, தற்போது தொடங்கிவைத்துள்ளனா்.

தமிழகத்துக்கான எய்ம்ஸ், மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதி வழங்கவில்லை, குறைவாக நிதி வழங்குவதாக குற்றஞ்சாட்டுவது தவறு.

மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, மத்திய, மாநில, பிற நிதி அமைப்பு என 3 அமைப்புகள் நிதி வழங்குகின்றன. தமிழக அரசு அத்திட்டத்துக்கான நிலத்தைப் பெறுவது உள்ளிட்ட பணிகளை முடிக்காமல், நிதியை மட்டும் எதிா்பாா்க்கின்றனா். அதனால்தான் மத்திய அரசு நிதியை ஒதுக்காமல் உள்ளது. திட்டம் நிறைவேறும்போது தேவையான நிதி ஒதுக்கப்படும் என்றாா்.

அப்போது,மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி உடனிருந்தாா்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT