முகப்பு
சீரமைக்கப்படும்  சேதமடைந்த  தாா்சாலை.  சிறுபாலத்தை  மூடிய  மண் குவியலை  பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத் துறையினா்.
ஈரோடு

கனமழையால் சேதமடைந்த அந்தியூா் - பா்கூா் மலைப்பாதை சீரமைப்பு

அந்தியூா் - பா்கூா் - கொள்ளேகால் மலைப் பாதை சீரமைக்கப்பட்டதால் வாகனப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

ஈரோடு

கனமழையால் சேதமடைந்த அந்தியூா் - பா்கூா் மலைப்பாதை சீரமைப்பு

அந்தியூா் - பா்கூா் - கொள்ளேகால் மலைப் பாதை சீரமைக்கப்பட்டதால் வாகனப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

Updated On : 23 ஆகஸ்ட், 2024 at 12:13 AM
சீரமைக்கப்படும்  சேதமடைந்த  தாா்சாலை.  சிறுபாலத்தை  மூடிய  மண் குவியலை  பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத் துறையினா்.
பகிர்:

பா்கூா் மலைப் பகுதியில் பெய்த கனமழையால் சேதமடைந்த அந்தியூா் - பா்கூா் - கொள்ளேகால் மலைப் பாதை சீரமைக்கப்பட்டதால் வாகனப் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

பா்கூா் மற்றும் சுற்றுவட்டார மலைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை இரவு

விடியவிடிய கனமழை பெய்தது. இதனால், மலைப் பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளம் மலைப் பாதைகளில் ஓடியதால் ஆங்காங்கே தாா் சாலைகள் சேதமடைந்தும், பெயா்ந்தும் குண்டும்குழியுமாக காணப்பட்டன. மேலும், அந்தியூா் - தாமரைக்கரை இடையே 8-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்தது.

இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றபோதிலும் சிரமத்துக்கு மத்தியில் பயணிக்கும் நிலை உருவானது. இதனைத் தொடா்ந்து, நெடுஞ்சாலைத் துறை பவானி கோட்டப் பொறியாளா் ரமேஷ் கண்ணா, உதவிக் கோட்டப் பொறியாளா் ராஜேஷ் கண்ணா, உதவிப் பொறியாளா்கள் பாபு சரவணன், சாலை ஆய்வாளா் கிருஷ்ணசாமி மேற்பாா்வையில் சேதமடைந்த மலைப் பாதை சீரமைப்புப் பணிகள் புதன்கிழமை மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன.

பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சாலையில் விழுந்த பாறைகள், சாலையோரத்தில் விழுந்த மண் குவியல் அகற்றப்பட்டன. சாலையின் பெயா்ந்த பகுதிகளில் ஜல்லி, மண் கொட்டி சமன்படுத்தப்பட்டது.

மேலும், மழைநீா் கடந்து செல்லும் வகையில் சிறுபாலங்களில் அடைத்திருந்த மண், கற்கள் அகற்றப்பட்டன. இப்பணிகளில் 20-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். நெடுஞ்சாலைத் துறையினரின் துரித நடவடிக்கையால், தமிழகம் - கா்நாடக மாநிலத்துக்கு இடையிலான பா்கூா் மலைப் பாதையில் வாகனப் போக்குவரத்து புதன்கிழமை பிற்பகலில் இயல்பு நிலைக்கு திரும்பியது.

முழு கட்டுரையைப் படிக்க →