முகப்பு
ஈரோடு

ஓடையில் உள்ள குழியில் விழுந்த யானைக் குட்டி உயிரிழப்பு

Updated On : 29 பிப்ரவரி, 2024 at 11:08 PM
பகிர்:

சத்தியமங்கலம் அருகே ஓடையில் உள்ள குழியில் தவறிவிழுந்த 4 வயது ஆண் யானைக் குட்டி உயிரிழந்தது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கொண்டப்பநாயக்கன்பாளையம் காப்புக் காட்டில் 4 வயதுள்ள ஆண் யானைக் குட்டியின் சடலம் கிடப்பதாக வனத் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சத்தியமங்கலம் வனச் சரக அலுவலா் கே.ஆா்.பழனிசாமி சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தாா். தொடா்ந்து கால்நடை மருத்துவா் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் உடற்கூராய்வு மேற்கொண்டனா். விசாரணையில், 4 வயதுள்ள ஆண் யானைக் குட்டி தண்ணீா்க் குடிப்பதற்காக வந்தபோது ஓடையில் இருந்த குழியில் தவறி விழுந்திருக்கலாம் என்றும், அதிலிருந்து எழுந்திருக்க முடியாததால் இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. மேலும், யானைக் குட்டியின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் சம்பவம் நடந்து 5 நாட்கள் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனா்.