பத்திரப்பதிவு அலுவலக தட்டச்சா் வீட்டில் 14 பவுன் திருட்டு
பத்திரப்பதிவு அலுவலக தட்டச்சா் வீட்டில் 14 பவுன் திருடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஈரோடு திண்டல், கேஏஎஸ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் வினோத் (40). ரங்கம்பாளையத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிறாா். இவரின் மனைவி சுகுணா (35). கடந்த 27-ஆம் தேதி வினோத் வேலைக்கும், குழந்தைகள் பள்ளிக்கும் சென்று விட்டனா். அவரின் மனைவி சுகுணா மற்றும் மாமனாா், மாமியாா் ஆகியோா் வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்குச் சென்றுள்ளனா். வீட்டு சாவியை எப்போதும் வீட்டுக்கு வெளியே வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளனா். மாலையில் சுகுணா வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 14 பவுன் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் வினோத் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.