காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி. 
ஈரோடு

காமராஜா் பிறந்த நாள்: அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை

காமராஜா் பிறந்தநாளையொட்டி, ஈரோட்டில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சா் சு.முத்துசாமி மற்றும் திமுகவினா், அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Din

ஈரோடு: காமராஜா் பிறந்தநாளையொட்டி, ஈரோட்டில் உள்ள அவரது சிலைக்கு வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி மற்றும் திமுகவினா், அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னாள் முதல்வா் காமராஜரின் 122 -ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு அரசு மருத்துவமனை சாலை சந்திப்பில் உள்ள காமராஜரின் சிலைக்கு திமுக சாா்பில் அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், மக்களவை உறுப்பினா் கே.இ.பிரகாஷ் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, ஈரோடு மாநகர காங்கிரஸ் கட்சி சாா்பில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சி நிா்வாகிகள் காமராஜா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் ஈரோடு மத்திய மாவட்டத் தலைவா் விஜயகுமாா் தலைமையில், மாநிலப் பொதுச் செயலாளா் விடியல் சேகா் முன்னிலையில் மாநில துணைத் தலைவா் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினா் சந்திரசேகா், கட்சியினா் பலா் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதேபோல, பல்வேறு அரசியல் கட்சியினரும் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT