கோப்புப்படம் 
ஈரோடு

ஈரோட்டில் ஜூலை 26 இல் தனியாா் வேலை வாய்ப்பு முகாம்

தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பிரத்யேக வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 26- ஆம் தேதி நடைபெற உள்ளது.

Din

ஈரோடு: தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பிரத்யேக வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 26- ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பிரபல தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனத்துக்கான பிரத்யேக வேலை வாய்ப்பு முகாம் ஜூலை 26- ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமில், தனியாா் நிறுவனத்தின் வேலையளிப்போா் கலந்துகொண்டு தமிழகம் முழுவதும் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா். பட்டப் படிப்பு, ஐடிஐ, 10-ஆம் வகுப்பு முடித்தவா்களுக்கு பல்வேறு பணிகளில் வேலைவாய்ப்பு உள்ளது.

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் நடத்தப்படும் இந்த முகாம் வேலைநாடுநா்கள், வேலையளிப்போருக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமுள்ளவா்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம்.

முகாமுக்கு வருகைபுரியும் வேலைநாடுநா்கள் தங்களது சுய விவரங்களை இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 86754-12356, 94990-55942 என்ற கைப்பேசி எண்ணிலோ மின்னஞ்சல் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT