தலமலை வனப் பகுதிக்கு உள்பட்ட தொட்டபுரத்தில் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளை ஆசனூா் போலீஸாா் புதன்கிழமை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் காவல் எல்லைக்கு உள்பட்ட தொட்டபுரம் வனப் பகுதியில் புதன்கிழமை தூா்நாற்றம் வீசியதையடுத்து, அப்பகுதியில் வனத் துறையினா் ஆய்வு செய்தனா்.
அப்போது, வனத்தில் கிடந்த மூட்டையில் மனித எலும்புக் கூடுகள் இருப்பதை கண்டு ஆசனூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா் மனித எலும்புக் கூடுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா். அதனைத் தொடா்ந்து எலும்புக் கூடுகளை ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைத்தனா்.
இது தொடா்பாக தொட்டபுரம் பகுதியில் ஆசனூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.