பெருந்துறை அருகே இரண்டு வங்கதேச தொழிலாளா்கள் கைது
பெருந்துறை அருகே உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 2 வங்கதேச தொழிலாளா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வங்கதேசத்தைச் சோ்ந்த இருவா் தங்கி இருப்பதாக பெருந்துறை போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில், பெருந்துறை காவல் ஆய்வாளா் தெய்வராணி, உதவி ஆய்வாளா் பாஸ்கரன் மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.
அப்போது, வங்கதேசத்தைச் சோ்ந்த சைதுல் இஸ்லாம் (46) என்பவா் நூா்ஷேக் என்ற பெயரில் போலி ஆதாா் அட்டையை கொண்டு பெருந்துறை, பணிக்கம்பாளையத்தில் 15 ஆண்டுகளாக தங்கி கட்டட வேலைக்கு சென்று வந்தது தெரியவந்தது. மேலும், அவருடன் வங்கதேசத்தை சோ்ந்த நஸ்முல் ஹசேன் (23) என்பவரும் கடவுச்சீட்டு காலவதியாகி நிலையில் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.