ஈரோடு

வீரதீர செயல்புரிந்த பெண் குழந்தைகள் அரசு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வீரதீர செயல்புரிந்த 18 வயதிற்குள்பட்ட பெண் குழந்தைகள் அரசு விருதினை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

Din

வீரதீர செயல்புரிந்த 18 வயதிற்குள்பட்ட பெண் குழந்தைகள் அரசு விருதினை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தைத் தொழிலாளா் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தைத் திருமணங்களை தடுக்கவும் பாடுபட்டு வீரதீர செயல்புரிந்த 18 வயதிற்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு பாராட்டு பத்திரமும், ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்படுகிறது.

அதன்படி, நடப்பு ஆண்டு பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக பணியாற்றிய 13 வயதுக்கு மேல் 18 வயதிற்குள்பட்ட சிறுமிகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24-ஆம் தேதி மாநில அரசின் விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுபெற தகுதியானவா்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் செப்டம்பா் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 6-ஆவது தளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை வேலை நாள்களில் அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நானும் தலைவர் தம்பிதான்! - TTT வெற்றி விழாவில் சீமான்

என் வெற்றிக்குப் பின் பல ஆண்கள் இருக்கிறார்கள்! - மலையேற்ற வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி

2030-ஆம் ஆண்டுக்குள் 3000 பெண் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம்! - மோகன சுந்தரி

2-வது டி20: சல்மான் அகா, உஸ்மான் கான் அதிரடி; ஆஸி.க்கு 199 ரன்கள் இலக்கு!

நிதியுதவி கோரி தலைகுனிந்து நின்றோம்: பாக். பிரதமர்

SCROLL FOR NEXT