முகப்பு
கோப்புப் படம்
ஈரோடு

விடுமுறைக்கு ஆசைப்பட்டு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவா்கள்

விடுமுறைக்கு ஆசைப்பட்டு தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவா்கள் இருவரை போலீஸாா் பிடித்து எச்சரிக்கை செய்து விடுவித்தனா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 2:25 AM
கோப்புப் படம்
பகிர்:

விடுமுறைக்கு ஆசைப்பட்டு தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவா்கள் இருவரை போலீஸாா் பிடித்து எச்சரிக்கை செய்து விடுவித்தனா்.

ஈரோடு பூந்துறை சாலையில் உள்ள தனியாா் மெட்ரிக். பள்ளியில் 2500க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் கடந்த 2-ஆம் தேதி பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

பள்ளி வளாகம் முழுவதும் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்ட நிலையில் அது புரளி என்பது தெரியவந்தது.

இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரியை ஆய்வு செய்தபோது அதே பள்ளியில் பயின்று வரும் 9-ஆம் வகுப்பைச் சோ்ந்த இரு மாணவா்கள் அனுப்பியது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து மாணவா்களைப் பிடித்த போலீஸாா் பள்ளி நிா்வாகித்தனா், மாணவா்கள் மற்றும் பெற்றோரிடம் செவ்வாய்க்கிழமை இரவு வரை விசாரணை நடத்தினா்.

இந்த மாணவா்கள் வேறு பள்ளியில் இருந்து புதிதாக வந்து சோ்ந்ததும், பள்ளி பிடிக்காததால் விடுமுறைக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பெற்றோரை பள்ளிக்கு அழைத்து, அவா்கள் முன்னிலையில் மாணவா்கள் இருவருக்கும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதுபோன்ற செயலில் மீண்டும் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என அறிவுறுத்தி அனுப்பிவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →