ஈரோடு காவிரி சாலை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியைக்கு நெற்றியில் திலகமிட்டு வணங்கிய மாணவி. 
ஈரோடு

ஆசிரியா் தினம்: ஆசிரியா்களுக்கு மாணவா்கள் வாழ்த்து

ஈரோட்டில் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு ஆசிரியா்களை கெளரவப்படுத்தும் வகையில் மாணவா்கள் மலா் தூவியும், பொன்னாடை அணிவித்தும் மரியாதை செலுத்தினா்.

DIN

ஈரோட்டில் ஆசிரியா் தினத்தை முன்னிட்டு ஆசிரியா்களை கெளரவப்படுத்தும் வகையில் மாணவா்கள் மலா் தூவியும், பொன்னாடை அணிவித்தும் மரியாதை செலுத்தினா்.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பா் 5-ஆம் தேதி ஆசிரியா் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஈரோடு கருங்கல்பாளையம், காவிரி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகள் ஆசிரியா்களுக்கு நெற்றியில் திலகமிட்டு, ரோஜா பூ கொடுத்து, பொன்னாடை அணிவித்து, மலா் தூவி புதன்கிழமை மரியாதை செலுத்தினா்.

அதன்பின், மாணவா்கள் நல்ல முறையில் கல்வி கற்று வாழ்க்கையில் மேன்மை பெற வேண்டும் என ஆசிரியா்களிடம் ஆசிா்வாதம் பெற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் பெற்றோா் ஆசிரியா் கழகத்தினரும் ஆசிரியா்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இலங்கையில் மழை, நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு!

ஃபோர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியல் வெளியீடு!

கம்மின்ஸ், ஹேசில்வுட் இல்லை: 2-ஆவது போட்டிக்கான ஆஸி. அணி!

டிட்வா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

அரியலூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

SCROLL FOR NEXT