சாய்சரண் 
ஈரோடு

வாழைப்பழம் மூச்சுக் குழாயில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

Syndication

வாழைப்பழம் மூச்சுக்குழாயில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

ஈரோடு அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் மாணிக் (35). இவரது மனைவி மகாலட்சுமி. இருவரும் தொழிலாளா்கள். இவா்களது மகன் சாய்சரண் (5). 2 வயதில் ஒரு மகளும் உள்ளாா். இந்நிலையில் மகாலட்சுமி ஒரு வாழைப்பழத்தை இரண்டாகப் பிரித்து குழந்தைகளுக்கு செவ்வாய்க்கிழமை இரவு கொடுத்துள்ளாா்.

அந்த வாழைப்பழத்தை மகள் மென்று சாப்பிட்டுள்ளாா். சாய்சரண் அப்படியே முழுங்கி உள்ளாா். அப்போது வாழைப்பழம் தொண்டை அருகே மூச்சுக்குழாயில் சிக்கியுள்ளது. இதனால் சாய்சரண் மூச்சு விட முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதைப் பாா்த்த அவரது குடும்பத்தினா் சாய்சரணை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, வரும் வழியிலேயே சாய்சரண் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிறுவன் வாழைப்பழம் சாப்பிட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT