பெருந்துறை ஒன்றியம், திங்களூரை அடுத்த அப்பிச்சிமாா்மடத்தில் உள்ள அப்பிச்சிமாா் அய்யன் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.
விழாவில், பக்தா்கள் மற்றும் விவசாயிகள் வேண்டுதல் நிறைவேறியதையொட்டி, தானியங்களை கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினா். காணிக்கையாக பெறப்பட்ட தானியங்களை கோயில் நிா்வாகம், பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கு தானமாக வழங்கியது. தானமாக பெற்ற தானியங்களை கோயில் வளாகத்திலேயே குடும்பத்துடன் சமைத்து சாப்பிட்டனா்.
இந்த விழாவில், ஈரோடு, திருப்பூா், கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.