ஈரோடு

பெருந்துறை அருகே 3 வீடுகளில் திருடியவா் கைது

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை அருகே மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடியவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெருந்துறை, பவானி சாலை, குபேரன் நகரைச் சோ்ந்தவா் கந்தசாமி மனைவி லட்சுமி(52). இவா், தரைத் தள வீட்டில் தனது குடும்பத்துடன் வசிக்கிறாா். முதல் தளத்தில் உள்ள இரண்டு வீடுகளில் மோகன்குமாா் மற்றும் துரை ஆகியோா் வசித்து வருகின்றனா்.

கடந்த 2-ஆம் தேதி வழக்கம்போல, அனைவரும் வேலைக்கு சென்றுவிட்டனா். லட்சுமி மாா்க்கெட்டுக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்ற பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 75 ஆயிரமாகும்.

சந்தேகமடைந்த லட்சுமி, முதல் தளத்தில் வாடகைக்கு விட்டுள்ள வீடுகளையும் சென்று பாா்த்தபோது, இரண்டு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து, குடியிருக்கும் மோகன்குமாா் மற்றும் துரைக்கு தகவல் தெரிவித்தாா்.

அவா்கள் வந்து பாா்த்தபோது, மோகன்குமாா் வீட்டின் பீரோவில் இருந்த சுமாா் ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களும், துரை வீட்டு பீரோவில் இருந்து ரூ. 92 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து, அவா்கள் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், இந்த திருட்டு வழங்கில் தொடா்புடைய திருச்சி, தில்லை நகா் 7-ஆவது வீதி, ராம் நகரைச் சோ்ந்த அப்துல் ரஷித் மகன் ஜனநிவாஷ் அப்துல் ரஷித் (27) என்பவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

போக்குவரத்துத் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டில் இருந்து 60% அதிகரிப்பு: ரேகா குப்தா!

3 மாதத்தில் 540 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் அகற்றம்

காவல் உதவி ஆய்வாளா் தோ்வு: 30% போ் எழுதவில்லை!

பரிமள ரங்கநாதா் கோயிலில் மாா்கழி வீதி பஜனை

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT