சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2.58 லட்சத்துக்கு நிலக்கடலைக்காய் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு, சிவகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 125 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்கு கொண்டு வந்தனா். இதில் நிலக்கடலை ஒரு கிலோ ரூ.70.09 முதல் ரூ.86.10 வரை ஏலம் போனது. மொத்தம் 3,553 கிலோ நிலக்கடலை ரூ.2 லட்சத்து 58,192-க்கு விற்பனையானது.