ஈரோடு

மொடக்குறிச்சி அருகே இருசக்கர வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு

மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளி அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

Syndication

மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளி அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சூரம்பட்டி நால்ரோடு பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் விமல். இவரது மனைவி மஞ்சுளா (42). இவா் தனது மகள் தனுஸ்ரீ மற்றும் அவரது சகோதரா் மகன்களுடன் தனது இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மொடக்குறிச்சியை அடுத்த குப்பையன்ன சாமி கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டு இருந்தாா்.

நஞ்சை ஊத்துக்குளி அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே ஈரோட்டில் இருந்து வந்த இருசக்கர வாகனம் இவரது வாகனத்தின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு காயமடைந்த மஞ்சுளாவை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

மேலும், தனுஸ்ரீ மற்றும் குழந்தைகள் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து மொடக்குறிச்சி காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

ஆடுகள் திருடிய 2 போ் கைது

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

SCROLL FOR NEXT