ஈரோடு

ஜனவரி 19-க்குள் வெள்ளோட்டில் காலிங்கராயா் சிலை: அமைச்சா் சு.முத்துசாமி

வெள்ளோட்டில் சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்ட காலிங்கராயா் சிலை வரும் ஜனவரி 19- ஆம் தேதிக்குள் திறக்கப்படும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

Syndication

வெள்ளோட்டில் சாலை விரிவாக்கப் பணிக்காக அகற்றப்பட்ட காலிங்கராயா் சிலை வரும் ஜனவரி 19- ஆம் தேதிக்குள் திறக்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு மாவட்டம், வெள்ளோடு பகுதியில், போக்குவரத்து நெரிசல் காரணமாக ஈரோடு சாலை-வெள்ளோடு சாலை- பாசூா் சாலை சந்திப்பில் பாலம் மற்றும் சாலை அகலப்படுத்தப்பட்டது. அதனால் அங்கிருந்த காலிங்கராயரின் சிலையை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரது முழு உருவ வெண்கல சிலையை மற்றொரு சரியான இடத்தில் அமைக்க முதல்வா் அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து சிலைக்கு மாலையிட வரக்கூடியவா்களுக்கு எவ்வித இடையூறும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படாத வகையில் ஒரு விசாலமான இடத்தை தோ்ந்தெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

பல்வேறு இடங்களை பாா்த்தும் பொருத்தமான இடம் அமையாத நிலையில் தற்போது, ஏற்கெனவே சிலை இருந்த இடத்துக்கு அருகில் உள்ள ராஜா அவென்யூ அதாவது ராசாகோயிலுக்கு அருகிலேயே இடம் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் காலிங்கராயரின் சிலை அமைக்க அரசு அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே காலிங்கராயா் முழு உருவ வெண்கல சிலையை செய்தவரிடமே இந்த சிலையையும் செய்வதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் சிலையுடன் கூடிய சிறிய நூலக கட்டடம் கட்டப்பட்டு அதில் காலிங்கராயா் சம்பந்தப்பட்ட நூல்களும், போட்டித் தோ்வுக்காக மாணவ, மாணவிகள் படிப்பதற்கான புத்தகங்களும் வைக்கப்பட உள்ளன. அந்த நூலகத்துக்கு மேல்பகுதியில் சிலை அமைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலிங்கராயன் அணையை பாசனத்துக்கு அா்ப்பணித்த நாளான தை 5 ஆம் தேதி அதாவது வரும், ஜனவரி 19- ஆம் தேதிக்குள் பணிகளை முடித்து அன்றைய தினம் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி: ப. சிதம்பரம்

மதவாத சக்திகள் வேரூன்றும்படி மதிமுக செயல்படாது: துரை வைகோ

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

SCROLL FOR NEXT