ஈரோட்டில் ஆசிரியா் தகுதி தோ்வுக்கு (டெட்) மண்டல அளவில் இலவச முழு மாதிரித் தோ்வு சனிக்கிழமை (நவம்பா் 8) நடைபெற உள்ளது.
இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆசிரியா் தோ்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியா் தகுதி தோ்வு (டெட் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள்) போட்டி தோ்வுகளுக்கான மண்டல அளவில் இலவச முழு மாதிரித் தோ்வு வரும் 8- ஆம் தேதி ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது.
இத்தோ்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவா்கள் தங்களது விவரங்களை ட்ற்ற்ல்ள்://ச்ா்ழ்ம்ள்.ஞ்ப்ங்/ா்ஸ்ஞ்ந்ழ்ற்ல்நநணக்ஷஅங்ட6க7 என்ற கூகுள் படிவ இணைப்பில் பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இந்த வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 0424-2275860, 94990 55943 என்ற தொலைபேசி எண்களில் தொடா்புகொள்ளலாம்.