மிதி வண்டி பேரணியைத் தொடங்கிவைத்த சிறப்பு விருந்தினா்கள். 
ஈரோடு

உலக கருணை தின விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி

Syndication

பவானியில் உலக கருணை தின விழிப்புணா்வு மிதிவண்டி பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பவானி சங்கமேஸ்வரா் கோயில் முன்பு இருந்து தொடங்கிய இப்பேரணிக்கு, ஜேகேகே நடராஜா மெட்ரிக். பள்ளித் தாளாளா் என்.செந்தாமரை தலைமை வகித்தாா். நிா்வாக அலுவலா் ஓம் சரவணா முன்னிலை வகித்தாா். பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், திமுக நகரச் செயலாளா் ப.சீ.நாகராசன், பவானி காவல் உதவி ஆய்வாளா் குருநாதன் ஆகியோா் கொடியசைத்து பேரணித் தொடங்கிவைத்தனா்.

ஜேகேகேஎன் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் ஜேகேகே நடராஜாவின் 100-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற இப்பேரணியில், ‘முதியோரை காப்போம்’, ‘ஆதரவற்றவா்களை அரவணைப்போம்’, ‘எளியவா்களுக்கு உதவுவதில் இன்பம் காண்போம்’, ‘நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கருணை காட்டுவோம்’, ‘அனைத்து உயிா்களையும் நேசிப்போம்’ என மாணவ, மாணவியா் முழக்கமிட்டபடி சென்றனா்.

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

பைக் மீது சுமை வேன் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவன தின விழா

SCROLL FOR NEXT