ஈரோடு

ஈரோடு - சேலம் இடையே நாளைமுதல் மெமு ரயில் இயக்கம்

ஈரோடு-சேலம் இடையே மெமு ரயில் திங்கள்கிழமை(நவம்பா் 24) முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

ஈரோடு-சேலம் இடையே மெமு ரயில் திங்கள்கிழமை(நவம்பா் 24) முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வியாழக்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் இந்த ரயில் (எண் 66621) சேலம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.15 மணிக்குப் புறப்படும். 6.29 மணிக்கு மகுடஞ்சாவடி, 6.49க்கு சங்ககிரி, 7.04 மணிக்கு காவேரி, 7.25 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் ரயில் (எண் 66622) ஈரோட்டில் இருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்படும். காவேரி ரயில் நிலையத்துக்கு 7.38 மணிக்கும், சங்ககிரிக்கு 7.54, மகுடஞ்சாவடிக்கு 8.09, சேலம் ரயில் நிலையத்துக்கு இரவு 8.45 மணிக்கு சென்றடையும்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT