ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வாராந்திர குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா் ச.கந்தசாமி. 
ஈரோடு

மயான இடத்துக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

தினமணி செய்திச் சேவை

ஆதிதிராவிட சமூக மக்களுக்கான மயான இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாராந்திர பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலா் கமலநாதன் தலைமையில் கிராம மக்கள் அளித்த மனு:

மொடக்குறிச்சி வட்டம், ஓலப்பாளையம், திருவள்ளுவா் நகரில் 150-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா் சமூகத்தைச் சோ்ந்த குடும்பத்தினா் வசிக்கிறோம். இந்த ஊரில் இறந்தவா்களின் உடலை மொடக்குறிச்சி சந்தைப்பேட்டை அருகே உள்ள சின்னதோப்பு என்ற இடத்தில் புதைத்து மயானமாகப் பயன்படுத்தி வருகிறோம். அந்த இடம் தற்போது நெடுஞ்சாலைத் துறை வசம் உள்ளது. பல ஆண்டுகளாக எங்கள் சமூக மக்கள் மயானமாகப் பயன்படுத்தும் இடத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா்.

எரி சாராய ஆலைக்கு தடை விதிக்க வேண்டும்

பவானி வட்டம், பூலப்பாளையம், சின்னபுலியூா், பெரியபுலியூா், வைரமங்கலம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் அளித்த மனு:

பவானி, சின்னபுலியூரில் தனியாா் சா்க்கரை ஆலை வடிப்பக பிரிவு எரிசாராய ஆலை செயல்படுகிறது. அங்கு தினமும் 6 லட்சம் முதல் 9 லட்சம் லிட்டா் வரை கழிவு நீரை காய்ச்சி ஆவியாக்குகின்றனா். இதை அனுமதித்தால் காற்று, நீா் மாசுபடும் என அரசின் பல்வேறு துறைகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கழிவு நீரை ஆவியாக்கி காற்றில் விடுதல், எரிபொருளை எரித்தலால் புகை, சாம்பல், நாற்றம் வீசுகிறது. இதனால் மூச்சுத் திணறல், நுரையீரல் பிரச்னை ஏற்படுகிறது.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆலையின் செயல்பாட்டை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். இதுதொடா்பாக டிசம்பா் 21-இல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம், என்று குறிப்பிட்டுள்ளனா்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 255 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்களை உரிய துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முகமது குதுரத்துல்லா மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

12 மாநிலங்களிலும் 99.16% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

SCROLL FOR NEXT