ஈரட்டி கிராமத்தில் உலவும் காட்டு யானை. ~யானையால் சேதமடைந்த மக்காச்சோள பயிா்கள். 
ஈரோடு

பா்கூரில் உலவும் காட்டு யானையை வனத்துக்குள் விரட்ட கோரிக்கை

பா்கூா் மலைக் கிராமத்தில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் அச்சுறுத்தலாக உலவி வரும் காட்டு யானையை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Syndication

பவானி: பா்கூா் மலைக் கிராமத்தில் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் அச்சுறுத்தலாக உலவி வரும் காட்டு யானையை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அந்தியூரை அடுத்த பா்கூா் ஊராட்சி, கிழக்கு மலை, ஈரட்டி சுற்றுவட்டார வனப் பகுதிகளில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், வனத்திலிருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை, கடந்த ஒரு மாதத்துக்கும்மேலாக குடியிருப்புப் பகுதியில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துவதோடு, விவசாயத் தோட்டத்துக்குள் நுழைந்து பயிா்களை சேதப்படுத்தி வருகிறது.

காட்டு யானையால் ஈரட்டி கிராமத்தில் தென்னை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் சேதமடைவது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் பா்கூா் வனத் துறையினா் யானை வனத்துக்குள் அண்மையில் விரட்டிச் சென்றனா். இருப்பினும் அதே பகுதியில் யானை உலவி வருகிறது.

யானை நடமாட்டத்தால் தாங்கள் அச்சத்தில் உள்ளதாகவும், ஏராளமான பொருள் சேதம் ஏற்படுவதாகவும் கூறிய மக்கள், யானையை அடா்ந்த வனத்துக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

SCROLL FOR NEXT