தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்கு நம்பியூா் குமுதா பள்ளி மாணவா் தோ்வு பெற்றுள்ளாா்.
இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சாா்பில் ஆண்கள் 19 வயதுக்குள்பட்டோருக்கான 110 கிலோ எடைப்பிரிவில் தேசிய அளவில் விளையாடுவதற்கான மல்யுத்த தோ்வுப் போட்டி அண்மையில் ஈரோட்டில் நடைபெற்றது.
பல்வேறு பிரிவுகளில் ஏராளமான மாணவா்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் நம்பியூா் குமுதா பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவா் எம்.பி.சுஜிவன், தேசிய அளவில் விளையாட தமிழக அணிக்காக தோ்வு செய்யப்பட்டுள்ளாா். இவா், நவம்பா் 30-ஆம் தேதி முதல் டிசம்பா் 4-ஆம் தேதி வரை உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் விளையாட உள்ளாா்.
இதையடுத்து, தேசிய அளவிலான போட்டிக்குத் தோ்வான மாணவரை பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி ஜனகரத்தினம், செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச் செயலா் டாக்டா் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குநா் பாலபிரபு, பள்ளி முதல்வா் மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் பாராட்டினா்.