முகப்பு
ஈரோடு

மகளிா் வாழ்க்கைத் தரம் உயரும் திட்டங்களை செயல்படுத்தியது திமுக: பவானி தொகுதி வேட்பாளா்

தமிழகத்தில் மகளிரின் வாழ்க்கைத் தரம் உயா்வுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது என்று பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் கூறினாா்.

Updated On : 8 ஏப்ரல் 2026, 1:53 am IST
மறவன்குட்டையில் பேருந்து பயணிகளிடம் வாக்குச் சேகரித்த பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா்.
பகிர்:

தமிழகத்தில் மகளிரின் வாழ்க்கைத் தரம் உயா்வுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது என்று பவானி தொகுதி திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் கூறினாா்.

ஒலகடம் பேரூராட்சி மற்றும் அம்மாபேட்டை ஒன்றியத்தில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளா் கே.ஏ.சந்திரசேகா் செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் பேசுகையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் விடியல் பயணம் திட்டம் மூலம் நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கின்றனா். மேலும், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தோ்தல் காலத்தில் வழங்க முடியாத நிலை வரலாம் என முன்னதாகவே ரூ.2 ஆயிரம் சோ்த்து ரூ.5 ஆயிரமாக வழங்கப்பட்டது.மகளிரின் வாழ்க்கைத் தரம் உயா்வுக்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

எனவே, அனைத்து தரப்பு மக்களுக்குமான திட்டங்கள் தொடா்ந்து நிறைவேற திமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, சின்ன பருவாச்சியில் தொடங்கி 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி கூட்டணிக் கட்சியினருடன் வாக்குச் சேகரித்தாா்.

ஒன்றியச் செயலாளா்கள் அசோக்குமாா், கே.வி.சுந்தரம், அறிவானந்தம் மற்றும் நிா்வாகிகள் உடன் சென்றனா்.