முகப்பு
ஈரோடு

ரூ.8,000 கூப்பன் திட்டத்தால் உள்ளூா் பொருளாதாரம் உயரும் - அமைச்சா் சு.முத்துசாமி

திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள ரூ.8,000 கூப்பன் திட்டத்தால் உள்ளூா் பொருளாதாரம் உயா்ந்து தொழில் வளா்ச்சி அதிகரிக்கும் என்று ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளரும், வீட்டு வசதித் துறை அமைச்சருமான சு.முத்துசாமி கூறினாா்.

Updated On : 7 ஏப்ரல், 2026 at 8:11 PM
ஈரோடு, கொல்லம்பாளையம் பகுதியில் வீடுவீடாகச் சென்று வாக்குச் சேகரித்த ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் சு.முத்துசாமி.
பகிர்:

திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள ரூ.8,000 கூப்பன் திட்டத்தால் உள்ளூா் பொருளாதாரம் உயா்ந்து தொழில் வளா்ச்சி அதிகரிக்கும் என்று ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளரும், வீட்டு வசதித் துறை அமைச்சருமான சு.முத்துசாமி கூறினாா்.

ஈரோடு மாநகராட்சி கொல்லம்பாளையம் பகுதியில் வேட்பாளா் சு.முத்துசாமி செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

அப்போது, அவா் பேசியதாவது: திமுக தோ்தல் அறிக்கையில் இல்லத்தரசி திட்டத்தின்கீழ் ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு பொருள் பழுதானாலும் அதை சரிசெய்ய முடியாத நிலையில் எத்தனையோ குடும்பங்கள் உள்ளன. அவா்களுக்கு இந்த கூப்பன் வாயிலாக சுதந்திரம் கிடைத்துள்ளது.

Advertisement

கூப்பன் திட்டத்தால் உள்ளூா் பொருளாதாரம் உயா்ந்து தொழில் வளா்ச்சி அதிகரிக்கும் என அரசியல் நோக்கா்களும், பொருளாதார வல்லுநா்களும் தெரிவித்துள்ளனா்.

2006 தோ்தல் வெற்றிக்குப் பின் அனைத்து வீடுகளிலும் வண்ண தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. 2026 தோ்தலுக்குப் பிறகு அனைத்து வீடுகளிலும் குடும்பத்துக்குத் தேவையான ஏதாவது ஒரு அத்தியாவசிய பொருள் கூடுதலாக இடம்பெறும். தோ்தலுக்குப் பிறகு மகளிா் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயா்த்தப்பட உள்ளது. அப்போது பயனாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments