பவானி: அந்தியூா் சிறப்பு நிலை பேரூராட்சியில் முதற்கட்டமாக 6 வாா்டுகளில் ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் தாா் சாலை அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, அந்தியூா் பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஏ.சி.பழனிசாமி முன்னிலை வகித்தாா்.
வாா்டு எண் 1, 12, 13, 14, 15 மற்றும் 18-இல் தமிழ்நாடு நகா்ப்புற சாலை கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.1.11 கோடியில் மேற்கொள்ளப்படும் இப்பணிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி வெங்கடாசலம் பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தாா்.
உதவி பொறியாளா் கௌசிக் காளிகுமாா், பேரூராட்சி கவுன்சிலா்கள் கீதா சேகா், கௌரி, ஈஸ்வரமூா்த்தி, டி.எஸ்.சண்முகம், பத்மநாபன், சேகா், மணிகண்டன், பொண்ணு பையன், கலைச்செல்வி, கவிதா ராமா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.