முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலம் அருகே கடந்த 2 மாதங்களாக போக்குகாட்டி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:05 AM
கூண்டில் சிக்கிய சிறுத்தை.
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:12 PM

சத்தியமங்கலம் அருகே கூண்டில் சிக்காமல் கடந்த 2 மாதங்களாக போக்குகாட்டி வந்த சிறுத்தை சனிக்கிழமை சிக்கியது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், விளாமுண்டி வனத்தில் இருந்து வழிதவறி வந்த சிறுத்தை புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள மாராயிபாளையத்தில் உலவியதுடன், அப்பகுதியில் இருந்த கால்நடைகளைத் தாக்கிக் கொன்று வந்தது. இந்நிலையில், சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, சிறுத்தையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பல்வேறு பகுதியில் வனத் துறையினா் தானியங்கி கேமராக்களை பொருத்தி கடந்த 2 மாதங்களாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனா்.

Advertisement

கூண்டில் சிக்கிய சிறுத்தை.
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:25 PM

சிறுத்தை பதுங்கும் இடத்தை தெரிந்துக் கொண்ட வனத் துறையினா் அங்கு கூண்டுவைத்தனா். அதில் சிக்காமல் போக்குகாட்டி வந்த சிறுத்தை சனிக்கிழமை அதிகாலை சிக்கியது.

இதையடுத்து, கால்நடை மருத்துவா் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினா், சிறுத்தைக்கு மயக்கி ஊசி செலுத்தினா். பின்னா், சிறுத்தையை லாரி மூலம் மங்களப்பட்டி வனப் பகுதிக்கு வனத் துறையினா் கொண்டு சென்றனா்.

மயக்கம் தெளிந்து சிறுத்தை இயல்பு நிலைக்குத் திருப்பியதையடுத்து, வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.